தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படிப்பில் பின்தங்கும் மாணவர்களின் பிரச்சனை

படிப்பில் பின்தங்கும் மாணவர்களின் பிரச்சனை

படிப்பில் பின்தங்கும் மாணவர்களின் பிரச்சனை


UPDATED : மே 16, 2011 12:00 AM

ADDED : மே 16, 2011 09:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2011 12:00 AM ADDED : மே 16, 2011 09:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் இடை நிற்கும் மாணவர்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டடுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்தும் பொருட்டு ஒன்பதாம் வகுப்பில் 90 சதம் தேர்ச்சி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பின் தங்கிய மாணவர்களின் பட்டியல் எடுத்து பெற்றோர்களை வரவழைக்
கின்றனர். அவர்களிடம் உங்களது பையன் படிப்பில் மிக மோசமாக உள்ளான், அவனுக்கு தேர்ச்சி போட்டு சான்றிதழ் வழங்குகிறோம், நீங்கள் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என, கட்டாயப்படுத்தி டி.சி. வழங்குகின்றனர். பெற்றோர்களும் நமது மகன் தேர்ச்சி பெறாவிட்டால் ஒரு வருடம் வீணாகிவிடும் என்பதால், ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சியுடன் டி.சி. பெற சம்மதிக்கின்றனர்.


இப்படி டி.சி. பெற்ற மாணவர்கள் பிற பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படுகிறது. படிப்பில் பின் தங்கிய மாணவரை வைத்து  பத்தாம் வகுப்பில் எப்படி 100 சத தேர்ச்சி பெறுவது என்பதால் பள்ளிகள் சேர்க்க மறுக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் பின் தங்கிய மாணவர்கள் டி.சி. பெற்று விட்டு பத்தாம் வகுப்பில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.


இந்த மாணவர்கள் வேறு வழியில்லாமல் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்படும் போது இடை நிற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகள், மாணவர்கள் இடை நிற்றல் இருக்க கூடாது என்பதற்காகத்தான் ஒன்பதாம் வகுப்பில் 90 சதம் தேர்ச்சி வழங்கும் படி உத்தரவிட்டுள்ளனர். ஆனால், அதற்கு மாறாக பத்தாம் வகுப்பில் சேர முடியாமல் இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us