UPDATED : மே 16, 2011 12:00 AM
ADDED : மே 16, 2011 10:59 AM
மதுரை ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி பல்வேறு பட்டப்படிப்புகளை கற்பிக்கின்றது. இக்கல்லூரி கடந்த 1966ம் ஆண்டு முதல் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தின் அங்கீகாரத்துடன் 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாண்டு இளநிலை பி.ஏ., இசைப்படிப்பு, இரண்டாண்டு முதுநிலை எம்.ஏ., இசைப்படிப்பு மற்றும் ஓராண்டு எம்.பில்., இசைப்படிப்புகளை படிக்கலாம். பிளஸ்2 முடித்த மாணவர்கள் இளநிலை இசைப்படிப்பில் சேரலாம்.
இசைத்துறையில் பட்டப்டிப்பை முடித்தவர்கள் இசைப்பள்ளிகள், இசைக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கலைத்துறை, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் வேலைவாய்ப்பை பெற முடியும். இதுதவிர சவுண்டு இன்ஜினியரிங், ரெக்கார்டிங் போன்ற மல்டிமீடியா துறையிலும், இசைக் கருவிகள் தயாரிப்பு கம்பெனிகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளது. சொந்தமாகவும் இசை பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.
கல்லூரி முகவரி:
ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
15அ, லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே சாலை,
தல்லாகுளம், மதுரை.
