UPDATED : மே 17, 2011 12:00 AM
ADDED : மே 17, 2011 04:48 PM
இந்தியா மற்றும் சீனாவில் உள்ள இளைஞர்களுடன் போட்டியிட வேண்டும் என்றால் அதற்காக அதிகம் உழைக்க வேண்டும். போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்று அமெரிக்க மாணவர்களுக்கு அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மெம்பிஸ் மாணவர்களிடையே உரையாடிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒரு வேளை நீங்கள் மும்பை அல்லது பெய்ஜிங்கில் உள்ள இளைஞர்களுடன் போட்டியிட நேரலாம். அவ்வாறு நேர்ந்தால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். அங்கு பெரும்பாலான இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார். அதற்கேற்ப நீங்கள் உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என கூறினார்.
நாம் புதிய உலகத்தில் இருக்கிறோம். இங்கு எல்லாவற்றிற்கும் போட்டிதான். வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு வேலை செய்ய முடியாது. கடினமாக உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் தொழிற்சாலைக்குச் சென்று கூட வேலை செய்யலாம். பெரிய நிறுவனத்தில் பணியாற்றலாம் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்கள் வெளியில் சென்று பாருங்கள். அந்த காலம் மாறிவிட்டது. இப்போதைய இளைஞர்களுடன் போட்டி போடும் அளவிற்கு உங்களது திறமையை வளர்த்துக் கொண்டால்தான் வேலை என்ற அளவிற்கு இருக்கிறது நிலைமை.
எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
