ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்
ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம்
UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 18, 2011 11:22 AM
ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2011-12ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் உதவி பெறாத தனியார், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாதார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், உருது, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி வழியில் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பில், ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்த இயக்ககத்தால் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் ஜூன் மாதம் 3ம் தேதிவரை, அலுவலக நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3ம் தேதி மாலை 5 மணிக்குள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
