UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 19, 2011 12:41 PM
இது குறித்து அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழக பேராசிரியர் எஸ். கெளரி கூறுகையில், பொறியியல் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அடிப்படை கணக்குத் தேர்வில், அவர்களது கணக்கு திறன் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் கணக்கில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நிலையில் பல்கலை இருப்பதை உணர்த்தியுள்ளது.
பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் சேரும் மாணவர்கள் கணக்கில் திறன்பெற்றிருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், பல மாணவர்கள் கணக்கில் பலகீனமானவர்களாக உள்ளனர். இதனால், மற்ற பாடப்பிரிவுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும், தேர்ச்சி விழுக்காடு நன்றாக இருந்தாலும், கணிதத்தில் தேர்ச்சியாகும் மாணவர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடாக உள்ளது.
"பொறியியலில் கணிதம்" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, பொறியியல் மாணவர்களுக்கு கணிதத்தில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்காக பேராசிரியர்கள் தாங்காளகவே முன் வர வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் பயிற்சி பாடத்திட்டம், மாணவர்களுக்கு கணக்கு மீதான ஆர்வத்தை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்த பயிற்சியின் துவக்கமாக, பிளஸ் 2 கணிதத்தை மறுபயிற்சி அளிப்பதாக இருக்கும். பிறகு, பொறியியல் படிப்பில் படிக்க விருக்கும் கணிதங்களின் அடிப்படையை கற்பிப்பதாக இருக்கும்.
சுமார் 160 பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் இது குறித்து அறிக்கை அனுப்பப்படும். ஒவ்வொரு பொறியியல் கல்லூரியும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை இந்த பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். மேலும், பேராசிரியர்களும் இந்த பயிற்சிக்கு வர வேண்டும். எனவே ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் 2 பேராசிரியர்களை இந்த பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் பேராசிரியர்களின் உதவியோடு இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது என்று பேராசிரியர் கெளரி தெரிவித்தார்.
