தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச சீருடை திட்டத்தில் மாற்றம் தேவை

இலவச சீருடை திட்டத்தில் மாற்றம் தேவை

இலவச சீருடை திட்டத்தில் மாற்றம் தேவை


UPDATED : மே 22, 2011 12:00 AM

ADDED : மே 22, 2011 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 22, 2011 12:00 AM ADDED : மே 22, 2011 11:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, எந்தப் பயனும் இல்லாமல் வீணாகிறது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில், சத்துணவு பெறும் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 143 பேர் இலவச சீருடை பெற்றனர். இப்படி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இலவச சீருடையை பெறுகின்றனர். அவர்களுக்கு காக்கி டிரவுசர், வெள்ளை சட்டையும், மாணவிகளுக்கு நீலநிற பாவாடை, தாவணி, வெள்ளைச் சட்டையும் வழங்கப்படுகிறது.


அவற்றை துணியாக வழங்காமல், மாணவர்களின் வயதுக்கேற்ப, பொதுவான அளவில் தைத்தே வழங்குகின்றனர். அவையும் தாமதமாகவே வழங்கப்படுகின்றன. அந்த சீருடைகளும் உடலுக்கு பொருந்துவதாக இருப்பதில்லை. இந்த சீருடைகளை அணிந்து வரும்படி எந்த பள்ளியும் வலியுறுத்துவதும் இல்லை.

மாறாக, தங்கள் பள்ளிகளுக்கென பச்சை, வெள்ளை அல்லது நீலம், வெள்ளை அல்லது சிவப்பு, வெள்ளை என பல வண்ணங்களுடன், கட்டம், கோடு போட்ட சீருடைகளை அணியும்படி உத்தரவிட்டுள்ளன. எனவே, அரசு வழங்கிய சீருடைகள் வீடுகளில், மாணவர்களின் வாகனங்களை துடைக்கும் கழிவுத் துணிகளாக பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இலவச சீருடைக்கென அரசு செலவிடும் பல கோடி ரூபாயும் வீணாகிறது.


இதை தவிர்க்க, மாணவர்களுக்கு சீருடையை, துணியாகவே கொடுத்து விடலாம். அவற்றை அவரவர் அளவுகளுக்கு ஏற்ப தைத்துக்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மூலம் அலவன்சை வழங்கலாம். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வீணாவதை தவிர்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us