தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் முதல் இடங்களை பெற துடிக்கும் பள்ளி!

பிளஸ் 2 தேர்வில் முதல் இடங்களை பெற துடிக்கும் பள்ளி!

பிளஸ் 2 தேர்வில் முதல் இடங்களை பெற துடிக்கும் பள்ளி!


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து இப்பள்ளியின் தலைவர் கே. சுந்தரராஜன் கூறியதாவது:


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளையின் கீழ் 2000ம் ஆண்டு குறிஞ்சி கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது.  எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை இங்கு கற்பிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் இலவச விடுதி வசதி அளிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டுவரை 1373 மாணவர்களுக்கு 11 கோடி ரூபாய் மதிப்பிற்கு இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.


பள்ளியின் சாதனைகள்:
2004ம் ஆண்டு முதலே இப்பள்ளி கல்வியில் சாதனை படைத்து வருகிறது. பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் மாநில அளவில் நிகழ்த்தப்பட்ட சாதனையைத் தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் பிளஸ் 2 மற்றும் மெட்ரிக் தேர்வுகளிலும் இப்பள்ளி மாணவ, மாணவியர் மாநில அளவில் ரேங்க் பெற்று வருகின்றனர். 2007ம் ஆண்டு இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்தார்.


தொடர்ந்து இப்பள்ளி 2008ம் ஆண்டு மெட்ரிக் தேர்வில் மாநிலத்தில் இரண்டாமிடமும், பிளஸ் 2 தேர்வில் மூன்றாமிடமும் பிடித்தது. 2010ம் ஆண்டிலும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில்  மூன்றாமிடத்தையும், மாவட்ட அளவில் மெட்ரிக் தேர்வில் முதல் மூன்று இடங்களையும் இப்பள்ளி மாணவர்களே பிடித்தனர்.


இந்த ஆண்டும் சிந்துகவி என்ற மாணவி ஆயிரத்து 186 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் 1160 மதிப்பெண்களுக்கு மேல் 97 பேரும், 1150க்கு மேல் 162 பேரும் எடுத்துள்ளனர். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாநிலத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் குறிஞ்சி மாணவர்கள் சேர்க்கை பெறுகின்றனர். பள்ளி இயக்குனர்கள், ஆசிரியர்களே இந்த சாதனைகளுக்கு முக்கிய காரணம்.


பள்ளிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்:
மாணவ, மாணவியர்களை அடிக்கக் கூடாது என்றாலும், கடுமையாக அவர்களின் பேசக் கூடாது என்பது மாணவர்களின் மனப்பாங்கைப் பொறுத்தவரை சரியாக இருந்தாலும்கூட, அவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதில் சற்று பின்னடைவையே ஏற்படுத்தும்.


அதிக மதிப்பெண்கள் மட்டும் போதுமா?
பிற திறன்களையும் மாணவர்கள் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். எனினும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் மதிப்பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே, அதிக கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த கல்லூரிகளில் அட்மிஷன் என்ற நிலை இருக்கிறது. தற்போதைய நிலையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு பிற திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளலாம்.


பள்ளியின் குறிக்கோள்:
வரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்களுக்கு இலவச அளிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களியும் குறிஞ்சி பள்ளி மாணவ, மாணவியரே பிடிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us