தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் சென்னை மாணவி

தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் சென்னை மாணவி

தமிழக அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் சென்னை மாணவி


UPDATED : மே 24, 2011 12:00 AM

ADDED : மே 24, 2011 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2011 12:00 AM ADDED : மே 24, 2011 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், சென்னை, நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி திவ்யா, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட பிரிவில் 500க்கு 492 மதிப்பெண்களுடன் தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.


சென்னை, நங்கநல்லூரில் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு மாணவி எஸ்.திவ்யா 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலம் 98, இயற்பியல் 98, வேதியியல் 98, கம்ப்யூட்டர் சயின்ஸ் 98, சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கணிதத்தில் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.


இவரது தந்தை சீனிவாசன், மவுண்ட் ரோடு ஐ.ஓ.பி., வங்கியில் சீனியர் மேனேஜராக உள்ளார். அவரது தாய் சாரதா, தி.நகர் சின்டிகேட் வங்கியில் பணிபுரிகிறார். இவரது சகோதரி அனுசூயா, பி.டெக்., முடித்து, பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.


அதிக மதிப்பெண்கள் பெற்ற திவ்யா கூறுகையில், "இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். 10ம் வகுப்பில் 500க்கு 453 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே 2வது இடம் பிடித்தேன். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க கடுமையாக உழைத்தேன். எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் வெளியே செல்ல மாட்டேன். வீட்டில் டிவி பார்க்க மாட்டேன். விடிற்காலையிலும், மாலையிலும் விடாமுயற்சியுடன் படித்ததன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us