தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு

நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு

நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு


UPDATED : மே 24, 2011 12:00 AM

ADDED : மே 24, 2011 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 24, 2011 12:00 AM ADDED : மே 24, 2011 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரீஜனல் ரூரல் பாங்க் எனப்படும் ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான நார்த் மலபார் கிராமின் பாங்க் கேரளாவில் இயங்குகிறது. இந்தியாவிலுள்ள முக்கியமான 84 ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான என்.எம்.ஜி.பி., வங்கியை மத்திய அரசு, கேரள மாநில அரசு, சிண்டிகேட் வங்கி ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகிக்கின்றன.


கேரளாவை மையமாக வைத்து இயங்கும் இந்த வங்கியில் உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த வங்கியில் 33 அதிகாரிகளும் 50 அலுவலக உதவியாளர்களும் பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இந்தப் பதவிகளுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.


வயது
என்.எம்.ஜி.பி., யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
மலபார் கிராமின் பாங்கின் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இருந்த போதும் வங்கியியல், மார்க்கெட்டிங், நிதி, விவசாயம், ஹார்டிகல்சர், பாரஸ்ட்ரி, அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங், பிஸிகல்சர், அக்ரிகல்சுரல் மார்க்கெடிங் அண்டு கோஆபரேஷன், ஐ.டி., நிர்வாகவியல், சட்டம், பொருளாதாரம், கணக்கியல் போன்ற பிரிவுகளில் பட்டம் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனிருந்தால் அது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.


அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் திறனுடைய திறனுக்கு முன்னுரிமை உள்ளது. மேற்கண்ட இரண்டு பதவிகளுக்குமே விண்ணப்பிக்க மலையாள மொழியில் திறன் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்ச்சி முறை
என்.எம்.ஜி.பி., வங்கியின் காலி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மையங்களில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை
மலபார் கிராமின் வங்கியின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.350/ கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ரூ.50/ மட்டும் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை இணைய தளத்தில் டவுன்லோடு செய்து பெறப்படும் சலானின் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.


இந்த சலானை பூர்த்தி செய்து ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கிக் கிளையில் பின்வரும் அக்கவுண்ட் எண்களில் மட்டுமே செலுத்த வேண்டும். 42001050000053 என்ற அக்கவுண்ட் எண்ணில்உதவியாளராக விண்ணப்பிப்பவர்கள் "North Malabar Gramin Bank Recuritment Project 2011 & Office Assistant" என்ற பெயரிலும், அதிகாரிப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ""North Malabar Gramin Bank Recuritment Project 2011 & Officer Scale I" என்ற பெயரிலும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கிய தேதிகள்:
கட்டணம் செலுத்த, ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.05.2011


இணையதள முகவரி: http://app8.ibps.in/nmgb/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us