தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்புக்கு பதிவதில் சிக்கல்

வேலை வாய்ப்புக்கு பதிவதில் சிக்கல்

வேலை வாய்ப்புக்கு பதிவதில் சிக்கல்


UPDATED : மே 26, 2011 12:00 AM

ADDED : மே 26, 2011 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2011 12:00 AM ADDED : மே 26, 2011 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வினை 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில், 6 லட்சத்து 15 ஆயிரத்து 693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, நேற்று முதல் அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் பள்ளிகளில் பதிவு செய்யப்படும். பதிவிற்கு வரும் மாணவர்கள் மதிப்பெண் சான்றுடன், ரேஷன் கார்டு கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிக்கல்: மாநில அளவில் பெரும்பாலான மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு போன்ற மாவட்டங்களில் தங்கி படிக்கின்றனர். இவர்கள் படிப்பிற்காக மட்டுமே அம்மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்களது பெற்றோர் பிற மாவட்டங்களில் இருப்பர். இதனால், ரேஷன் கார்டில் அவரது பெயர் சொந்த மாவட்டத்தில் தான் இருக்கும்.


வேலைவாய்ப்பு பதிவிற்கு ரேஷன் கார்டு அவசியம் என தெரிவித்துள்ளது. இதனால், வெளிமாவட்ட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிகளில் ஆன்லைனில் பதியும் முறையில், ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பதிய முடியும் என்ற அளவிற்கு தற்காலிகமாக சாப்ட்வேர் அமைத்துள்ளோம். இதனால், ரேஷன் கார்டு இன்றி பதிய முடியாது. இவர்கள் வழக்கம் போல், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us