தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியீடு

10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியீடு

10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை 10 மணிக்கு வெளியீடு


UPDATED : மே 26, 2011 12:00 AM

ADDED : மே 26, 2011 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2011 12:00 AM ADDED : மே 26, 2011 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த மார்ச் 28 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை, எட்டு லட்சத்து, 57 ஆயிரத்து, 956 மாணவர்கள் எழுதினர். தனித்தேர்வு மூலம், 97 ஆயிரத்து, 655 பேர் எழுதினர்.


மார்ச் 22 முதல், ஏப்ரல் 11 வரை நடந்த மெட்ரிக் தேர்வை, ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 252 பேர் எழுதினர். ஆங்கிலோ இந்தியன் தேர்வை, 4,873 பேரும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வை, 1,561 பேரும் எழுதினர். ஒட்டு மொத்தத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர். 


விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.


நாளை காலை, 10 மணிக்கு, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் வெளியிடுவர். இதே நேரத்தில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது.


தேர்வு முடிவுகளை, தினமலர் இணையதளத்திலும் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us