UPDATED : மே 27, 2011 12:00 AM
ADDED : மே 27, 2011 11:59 AM
சென்னை: ஜூன் மாதம் 3 மற்றும் 4 ம் தேதிகளில், சென்னை ஏ.ஏ.டி-எஸ்.ஏ.இ. வளாகத்தில், மீடியா படிப்புகளைப் பற்றிய ஒரு அறிமுக விழா நடத்தப்படுகிறது. மீடியா துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு, மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளைப் பற்றி அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு.
"கேரியர் கனெக்ட்" என்று அழைக்கப்படும் இந்த 2 நாள் விழாவில், வொர்க் ஷாப், செமினார் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பார்வையாளர்களின் படைப்புத்திறனை தூண்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வொர்க் ஷாப் நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும்.
இந்த வொர்க் ஷாப் மற்றும் செமினார் நிகழ்ச்சிகளில், மீடியா பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
தேசிய திரைப்பட விருதுபெற்ற திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினர், கிரியேடிவ் கிராபிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட் தீபா உமேஷ், விளம்பர படத் தயாரிப்பாளர் சைலேஷ் சந்திரகாந்த் ஆகியோர், இளையதலைமுறையினர், மீடியா உலகைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் செமினார்களை நடத்த உள்ளனர்.
வொர்க் ஷாப் அமர்வுகள் கீழ்கண்ட விஷயங்களைப் பற்றி நடத்தப்பட உள்ளன.
விஷுவல் கம்யூனிகேஷன், அனிமேஷன் ஆர்ட்ஸ், ரெகார்டிங் ஆர்ட்ஸ் மற்றும் டிஜிடல் பிலிம் மேக்கிங்.
மேலும் மீடியா துறையிலிருந்து வரும் பல நிபுணர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு, இளைய தலைமுறையினருக்கு ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.
இந்நிகழ்ச்சியைப் பற்றி மேலும் விரிவான விவரங்களை அறிந்துகொள்ள 044-42911928/9962516000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது www.aatcollege.com என்ற வலைத்தளம் செல்லவும்.
