UPDATED : மே 27, 2011 12:00 AM
ADDED : மே 27, 2011 02:46 PM
அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு என்ற ஏ.எஸ்.ஆர்.பி., 1973ல் நிறுவப்பட்டது. ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்தியன் கவுன்சில் பார் அக்ரிகல்சுரல் ரிசர்ச் அமைப்பின் விஞ்ஞானிகள் தேவைக்கும், ஐ.சி.ஏ.ஆர்., அமைப்புக்குத் தேவைப்படும் இதர பதவிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதனையும் தலையாய நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் இந்தியாவின் பல்வேறு இடங்களில் 267 உதவியாளர் பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு
ஏ.எஸ்.ஆர்.பி., அறிவித்துள்ள உதவியாளர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 20 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதிலுள்ள சலுகைகள் குறித்து அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு அறிவித்துள்ள உதவியாளர் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை
அக்ரிகல்சுரல் சயின்டிஸ்ட்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டின் உதவியாளர் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த எழுத்துத் தேர்வு இந்தியாவெங்கும் உள்ள முக்கியமான 66 நகரங்களில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஏ.எஸ்.ஆர்.பி.,அறிவித்துள்ள பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.1000/ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆப்லைன் முறையில் செலுத்த விரும்புபவர்கள் ரூ.1500/ செலுத்த வேண்டும். அரசு விதிகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் சலுகைகள் உள்ளன.
இந்தப் பதவிக்கு ஆப்லைன் மற்றும் ஆன்லைன் என்ற இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். எனவே முதலில் இந்த அமைப்பின் இணைய தளத்திற்கு சென்று முழுமையான விபரங்களை அறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2011
இணைய தள முகவரி: http://asrb.org.in/
