UPDATED : மே 28, 2011 12:00 AM
ADDED : மே 28, 2011 10:16 AM
டிவி பார்ப்பதை தவிர்த்ததால் மாநில அளவில் மதிப்பெண் பெற முடிந்தது, என பத்தாம் வகுப்பு அரசு தேர்வில் மாநில அளவில் நான்காம் இடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்ற ஆர்.கே.ஆர்., பள்ளி மாணவி சவுமியா தெரிவித்தார்.
உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா, தமிழ் 98, ஆங்கிலம் 97, கணிதம் 99, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 என மொத்தம் 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் நான்காமிடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றார்.
மாணவி சவுமியா கூறுகையில், "அப்பா சிவசுப்பிரமணியம் விவசாயம் செய்து வருகிறார். இதற்கு முன் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவி சம்பத் செல்வியை ரோல் மாடலாக கருதி படித்தேன். பள்ளியில் அடிக்கடி நடத்தப்படும் தேர்வுகள், பள்ளி தாளாளர் ராமசாமி, ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் அளித்த ஊக்கத்தினால் நன்றாக படிக்க முடிந்தது. மாநில அளவில் நான்காமிடமும், மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்வத்துடன் நன்றாக படித்ததால், நல்ல மப்பெண் பெற முடிந்தது. தினசரி இரவு 11.00 மணி வரையும், காலை 4.00 மணி வரையும் படிப்பேன். தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கிய அறிவுரையும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. டிவி பார்க்கும் பழக்கம் இல்லை. 11ம் வகுப்பில், அறிவியல் பிரிவில் படிக்க ஆசையாக உள்ளது. எதிர்காலத்தில், கலெக்டராக வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது" என்றார்.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ராமசாமி, பள்ளி துணைத்தலைவர் கார்த்திக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
