தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு


UPDATED : மே 28, 2011 12:00 AM

ADDED : மே 28, 2011 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2011 12:00 AM ADDED : மே 28, 2011 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : முதல் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வுகள் ஜுன் மாதம் 20-ந்தேதி முதல் ஜுலை 7-ந் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த கடைசி நாளான ஏப்ரல் 12-ந் தேதி விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


ஏற்கனவே 2001-2002 பாடத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு தேர்வு எழுதி தோல்வி அடைந்தோர், அதே பழைய பாடத்திட்டத்தின் படியும், மற்ற வகை தனித்தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தின்படி, முதல் ஆண்டு 7 பாடங்களுக்கும், 2-ம் ஆண்டு 7 பாடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ஆயிரம் ரூபாய் சிறப்பு அனுமதி கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டண விவரம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப படிவங்கள் சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், மதுரை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் வழங்கப்படும்.


தனித்தேர்வர்கள் மேற்கண்ட மாவட்டங்களில் விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தரநிலைச்சான்றின் நகல்களையும் ரூ.30 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டப்பட்ட சுயவிலாசம் எழுதிய தபால் கவரையும் இணைத்து, விண்ணப்பம் வாங்கிய மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.


சென்னை நகர தனித்தேர்வர்கள் உள்பட அனைத்து தனித்தேர்வர்களும் தேர்வுக்கட்டணத்தை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள கருவூல செலுத்துச்சீட்டு (செலான்) மூலமாக அரசு கருவூலங்களில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போதே ஹால்டிக்கெட்டையும் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு வசுந்தராதேவி கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us