வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகன் மாநிலத்தில் மூன்றாமிடம்
வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகன் மாநிலத்தில் மூன்றாமிடம்
UPDATED : மே 28, 2011 12:00 AM
ADDED : மே 28, 2011 02:15 PM
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அய்யப்பன், தாமோதரன் இருவரும். 494 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
அய்யப்பன் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-97, கணிதம்-100, அறிவியல் -100, சமூக அறிவியல் 99. மொத்தம் 494.
அய்யப்பன் கூறியதாவது: "என் தந்தை சீனிவாசன் நான் சிறு வயதாக இருக்கும்போதே, சாலையோர மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்து, இறந்துவிட்டார். என் அம்மா ருக்மணி, வீட்டு வேலைகள் செய்து படிக்க வைத்தார். எனக்கு இரு சகோதர்கள் உள்ளனர். "குடும்பத்தை நீதான் காப்பாற்ற வேண்டும், நன்கு படி" என, அம்மா என்னை உற்சாகப்படுத்தி வந்தார். பள்ளியிலும் நல்ல கோச்சிங் எல்லாம் கொடுத்து, உற்சாகப்படுத்தினர். அதனால் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைத்து படித்தேன். மாநில அளவில் ரேங்க் எடுப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது. நான் சாப்ட்வேர் இன்ஜினியராவேன். வீட்டு வேலை செய்யும் என் அம்மாவால், அவ்வளவு படிக்க வைக்க செலவு செய்ய முடியாது, யாராவது உதவிக்கரம் நீட்டினால், மேலும் சாதிப்பேன்" என்று அய்யப்பன் கூறினார்.
மற்றொரு மாணவர் சாதனை: இதே பள்ளியில் படித்த தாமோதரன் என்ற மாணவர் 494 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-98, ஆங்கிலம்-97, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்- 99. தாமோதரன் கூறுகையில், "நான் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று நினைத்தேன். மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
