தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உ.பி.யில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் புதிய முறை

உ.பி.யில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் புதிய முறை

உ.பி.யில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் புதிய முறை


UPDATED : மே 30, 2011 12:00 AM

ADDED : மே 30, 2011 11:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2011 12:00 AM ADDED : மே 30, 2011 11:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை அளிப்பதில், பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இனிமேல், மாணவர்களுக்கான உதவித் தொகையை, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திவிட, உத்திரப் பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


உத்திரப் பிரதேச மாநிலத்தில், கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், கல்வி உதவித் தொகையில், 100 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியானது.


இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து, தகுதியான மாணவர்களுக்கு, அவர்களின் வங்கி கணக்கிலேயே, உதவித் தொகையை நேரடியாக செலுத்தி விடுவது என, மாநில அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து உத்திரப் பிரதேச மாநில நலத்திட்டத் துறையின் முதன்மை செயலர் பல்வீந்தர் சிங் கூறுகையில், "கல்வி உதவித் தொகை தொடர்பான முறைகேடுகளுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி உதவித் தொகையில் முறைகேடு செய்த, கல்லூரிகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us