UPDATED : மே 30, 2011 12:00 AM
ADDED : மே 30, 2011 12:03 PM
அ நிறம் | அளவு
கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி., கல்விநிறுவனம் பல்வேறு படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடத்தியது. இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 4 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இது கடந்தாண்டு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதற்காக நாடு முழுவதும் ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன. இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐ.ஐ.டி., கான்பூர் இயக்குனர் சஞ்சய் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,யில் படிப்பதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஐ.ஐ.டி., யில் படித்தால் வேலை தேடி வரும் என்பதாலும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
