தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயிர் அறிவியல் முதுகலை சேர்க்கை நாளை வரை நீடிப்பு

உயிர் அறிவியல் முதுகலை சேர்க்கை நாளை வரை நீடிப்பு

உயிர் அறிவியல் முதுகலை சேர்க்கை நாளை வரை நீடிப்பு


UPDATED : மே 30, 2011 12:00 AM

ADDED : மே 30, 2011 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 30, 2011 12:00 AM ADDED : மே 30, 2011 12:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரதிதாசன் பல்கலையில் நடத்தப்படும் உயிர் அறிவியல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராமசாமி வெளியிட்ட அறிக்கை: பாரதிதாசன் பல்கலை உயிர் அறிவியல் பள்ளியில் நடக்கும் உயிர் அறிவியல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பாடத்திட்ட முதுகலை படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நாளை 31ம் தேதி மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


விருப்பமுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பத்தை பல்கலை வெப்செட்டில் சென்று பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்ப கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பாரதிதாசன் பல்கலை மாணவர் சேவை மையத்தில், பாரதிதாசன் பல்கலை, திருச்சி என்ற பெயரில் பெறப்பட்ட 300 ரூபாய்க்கான டி.டி., கொடுத்தும் பெற்றுக் கொள்ளலாம்.


எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 150 ரூபாய்க்கான டி.டி., கொடுத்து விண்ணப்பம் பெறலாம். விபரங்களுக்கு பல்கலை வெப்சைட்டான www.bdu.ac.in பார்த்து தெரிந்து கொள்ளலாம். தவிர ஒருங்கிணைப்பாளர், உயிர் அறிவியல் பள்ளி, பாரதிதாசன் பல்கலை, திருச்சி-24 என்ற முகவரியிலும், 0431-2407061 என்ற ஃபோனிலும், 94421-47460 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us