தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் சாதனை

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் சாதனை

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் சாதனை


UPDATED : மே 31, 2011 12:00 AM

ADDED : மே 31, 2011 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2011 12:00 AM ADDED : மே 31, 2011 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ், 14 வயதுக்குட்பட்ட வேலைக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, பின்னர் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், இந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் வெள்ளி கொலுசு பட்டறை தொழிலில் இருந்து மீட்கப்பட்ட உமா மகேஸ்வரி என்ற மாணவி 485 மதிப்பெண்களும், ரம்யா லட்சுமி 478 மதிப்பெண்களும், தமிழ்ச்செல்வி 463 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர்.


இதே மாவட்டம் நரசுக்காடு கிராமத்தைச் சேர்ந்த, கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட நந்தகோபால் 471 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ரூபலட்சுமி 475 மதிப்பெண்களும், மரீஸ்வரன் 471 மதிப்பெண்களும் பெற்றனர். இவர்கள், சிறுவயதில் தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த அகர்பத்தி தொழிலில் இருந்து மீட்கப்பட்ட ஜோதி 474 மதிப்பெண்களும், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த குணாவதி 461 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.


இதேபோல, பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பின்னர் முறையான பள்ளிகளுக்கு மாற்றப்பட்ட 725 மாணவர்கள், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 74 பேர், 400க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.


தமிழகத்தில் தற்போது உள்ள 384 சிறப்பு பள்ளிகளில், 14 ஆயிரத்து 464 குழந்தைகள் படித்து வருகின்றனர். "ஏழ்மையில் வாழும் இந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவ விரும்புவோர், 044-24326205 அல்லது 044- 24349442 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us