தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாதிரிப் பள்ளிகளில் நுழைவு தேர்வு திட்டம் ரத்து

மாதிரிப் பள்ளிகளில் நுழைவு தேர்வு திட்டம் ரத்து

மாதிரிப் பள்ளிகளில் நுழைவு தேர்வு திட்டம் ரத்து


UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM

ADDED : ஜூன் 01, 2011 10:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM ADDED : ஜூன் 01, 2011 10:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டாயக் கல்வி சட்டம் எதிரொலி காரணமாக, தமிழகத்தில் இயங்கி வரும் 18 மாதிரிப் பள்ளிகளில், நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மத்திய அரசு நிதி உதவியுடன், தமிழகத்தில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான தர்மபுரி, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், கடந்தாண்டு 18 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட்டன. முழுமையான உள்கட்டமைப்பு வசதிகளுடன், தகுதியான ஆசிரியர்களுடன், இப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இப்பள்ளிகளில், நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்த்து, இலவசமாக ஆங்கில வழியில் கல்வி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்தாண்டு, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளில், தலா 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் துவங்குவதுடன், ஒவ்வொரு வகுப்பிலும் கூடுதலாக மற்றொரு பிரிவு துவங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், நாடு முழுவதும் கட்டாயக் கல்வி சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த, நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது. இதன் காரணமாக, வரும் கல்வியாண்டில், மாதிரிப் பள்ளிகளில் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பது என்பது குறித்து, எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us