UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM
ADDED : ஜூன் 02, 2011 11:13 AM
மதுரை மாவட்ட இளைஞர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தாராம் வெளியிட்ட அறிக்கை: கோவை ராணுவ ஆட்தேர்வு மையத்தின் மூலம் ராணுவத்திற்கான ஆட்தேர்வு முகாம் ஜூன் 22 முதல் 26 வரை, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பதவிகளுக்கு பிளஸ் 2ல் மொத்தம் 50 சதவீதம், தனிப்பாடங்களில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
22.6.88 முதல் 22.12.93 க்குள் பிறந்திருக்க வேண்டும். சோல்ஜர் பொதுப்பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி.,/ மெட்ரிக் தேர்வில் 45 சதவீதம், தனிப் பாடங்களில் 35 சதவீத மதிப்பெண் தேவை. 22.6.90 முதல் 22.12.93 க்குள் பிறந்திருக்க வேண்டும். மதுரை மாவட்ட இளைஞர்களின் சோல்ஜர் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் அசிஸ்டென்ட் பணிக்கான தேர்வு ஜூன் 22 லும், பொதுப் பணிக்கு 23, சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிக்கு 25லும் நடக்கிறது.
உடல்தகுதி தேர்வு மறுநாள் நடைபெறும். முன்னாள் படை வீரர்கள், விதவை, போர் விதவை, மற்றும் தேசிய மாணவர் படை சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஜூன் 22 ல் தேர்வு நடத்தப்படும், என தெரிவித்துள்ளார்.
