தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ-பாடில் ஜிமேட் விவரங்கள்

ஐ-பாடில் ஜிமேட் விவரங்கள்

ஐ-பாடில் ஜிமேட் விவரங்கள்


UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM

ADDED : ஜூன் 02, 2011 03:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM ADDED : ஜூன் 02, 2011 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக மேலாண்மை படிப்புக்கான சிறந்த கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற மாணவர்கள் ஜிமேட் தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வு ஆன்லைன் முறையிலும், மையங்களில் எழுத்துத் தேர்வாகவும் நடத்தப்படுகிறது.


அந்த வகையில், ஜிமேட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்துள்ளது கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில்.


ஜிமேட் தேர்வுக்கான மாடல் வினாத்தாள்கள், வினாக்களுக்கான நீண்ட விரிவான பதில்களை ஐ-பாட், ஐ-போன்கள் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் துவக்கப்பட்டுள்ளது.


ஜிமேட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களையும், முக்கியக் கேள்விகளையும் தங்களது ஐ-பாட், ஐ-போன்- ஐ-பாட் டச் மூலமாக தெரிந்து கொள்ளும் வசதியை ஜிமேட் கவுன்சில் துவக்கியுள்ளது மாணவர்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.


இந்த வசதியைப் பயன்படுத்தி, ஜிமேட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், பயிற்சித் தேர்வுகளின் மதிப்பெண்களை ஸ்கோர்கார்ட் முறையில் அறிந்து கொள்ளலாம்.


நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளும், அதற்கான பதில்களையும் படித்துக் கொள்ளலாம்.


தேர்வு பயிற்சியை எடுக்கும் போது, உரிய நேரத்தில் முடிப்பதற்கான க்வஸ்டின் டைமரை செட் செய்து கொள்ளலாம்.


தேர்வு தேதிக்கான கவுன்டவுன் வசதியும் உள்ளது.


இதுமட்டுமல்ல, ஜிமேட் பற்றி உலக அளவிலான மாணவர்கள் எங்கிருந்தும் தெரிந்து கொள்ள வசதியாக, ஜிமேட் அதிகாரப்பூர்வ வலைதளம், டிவிட்டர், பேஸ்புக் ஆகியவையும் உள்ளன.


இதிலிருந்தே மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரியைப் பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம், சேர்க்கைக்கு பதிவும் செய்து கொள்ளலாம். 


இதுபோன்ற பல்வேறு வசதிகளை ஜிமேட் கவுன்சில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us