தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு : பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு : பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு : பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்


UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM

ADDED : ஜூன் 03, 2011 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM ADDED : ஜூன் 03, 2011 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாவட்ட கல்வி அலுவலர் முருகன் எச்சரித்துள்ளார்.


"பள்ளி மாணவர் சேர்க்கையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 18 சதவீத இடம் ஒதுக்க வேண்டும்" என்று, 2004ல் அரசு ஆணையிட்டது. இதன் நகலை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்த பள்ளிக் கல்வித் துறை, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதை ஆய்வு செய்ய அறிவுறுத்தியது.


எனினும் பல பள்ளிகள், அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு விண்ணப்பம் வழங்காமல் அட்மிஷன் முடிந்து விட்டதாக அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் தரமான பள்ளிகளில் படிக்க விரும்பும் ஏழை மாணவர்கள், அட்மிஷன் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.


சிலர் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைமையும் உருவாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், "மாணவர் சேர்க்கையில் அனைத்து பள்ளிகளும் இட ஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது பள்ளி ஆய்வின்போது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us