தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் போலி மாணவர்கள்: தணிக்கை தேவை

பள்ளிகளில் போலி மாணவர்கள்: தணிக்கை தேவை

பள்ளிகளில் போலி மாணவர்கள்: தணிக்கை தேவை


UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM

ADDED : ஜூன் 03, 2011 11:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 03, 2011 12:00 AM ADDED : ஜூன் 03, 2011 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சலுகைகளுக்காக மேற்கொள்ளப்படும், போலி மாணவர்களின் பெயர் பதிவை கட்டுப்படுத்த, அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அரசு தொடக்கப்பள்ளிகளில், ஆண்டுதோறும், முதல் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையில், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடங்களை குறைப்பது, இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.


ஆசிரியர் எண்ணிக்கையை குறைக்க விரும்பாத பள்ளிகளில், தலைமை, உதவி ஆசிரியர்கள் இணைந்து, நூதன முறையில் அரசுக்கு தவறான தகவல்களை வழங்குகின்றனர்.வழக்கமான மாணவர்கள் மட்டுமின்றி, இல்லாத மாணவர்களின் பெயரில் சேர்க்கை வழங்கப்படுகிறது.


குறைந்தபட்சம் மூன்று முதல், பத்து போலி மாணவர்களின் பெயர்கள் இடம்பெறுகிறது. ஆசிரியர் குறைப்பு உள்ளிட்ட பிரச்னை மட்டுமின்றி, போலி மாணவர்களுக்கான புத்தகங்கள், சீருடை, சத்துணவு, முட்டை என, சலுகைகளும் கூடுதலாகக் கிடைக்கிறது. உயர் அதிகாரிகள் ஆய்வின்போது, வருகையில் இல்லாத மாணவர்களை நேரடியாகத் தேடிச் சென்று விசாரிக்க முடியாது.


இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான பள்ளிகளில், போலி மாணவர்களின் சேர்க்கை சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.இதை தவிர்க்க, மாணவர் சேர்க்கையில், அதிகாரிகளின் நேரடி தணிக்கைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us