UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 10:41 AM
"திருச்சி பாரதிதாசன் பல்கலையில் கிராமப்புற மாணவர்கள் சேருவதற்காக, மாணவர் சேர்க்கை ஜூன் 26ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது" என்று துணைவேந்தர் மீனா பேசினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. விழாவில், துணைவேந்தர் மீனா பேசியதாவது: தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த சங்கம், பணியாளர்களுக்கும், பல்கலைக்கும் ஒரு பாலமாக விளங்க வேண்டும்.
நீங்கள் முன் வைக்கும் நியாயமான கோரிக்கைகள், ஆட்சி மன்றக்குழுவில் விவாதிக்கப்பட்டு, சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்றப்படும். பல்கலையில் 25 ஆண்டுகளாக பணி புரிந்த பணியாளர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை பல்கலை கண்டிப்பாக செய்யும். சங்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
கம்ப்யூட்டர் இல்லாத துறை ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். கிராமப்புற மாணவர்கள் பல்கலையில் சேருவதற்காக, மாணவர் சேர்க்கை ஜூன் 26ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
