UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 12:52 PM
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டின் கீழ் தரமணியில் இயங்கி வரும் எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயப் படிப்பில் 5 வகையான படிப்புகள் உள்ளன.
அதாவது, திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒளிப்பதிவு), திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (படம் பதனிடுதல்), திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் (ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல்), படத்தொகுப்பு மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பட்டயம் மற்றும் இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுதல் ஆகிய 3 ஆண்டுகால பட்டயப் படிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 18ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விண்ணப்ப படிவங்களுக்கான விற்பனை தேதி நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விற்பனை மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 17ம் தேதி மாலை 5 மணி வரை என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
