UPDATED : ஜூன் 04, 2011 12:00 AM
ADDED : ஜூன் 04, 2011 03:12 PM
அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை, தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னதாக ஆன்லைனில் வெளியிட உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் மத்திய உயர்நிலைக் கல்வி வாரியத்தை (சி.பி.எஸ்.இ.) அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வின் முடிவை வெளியிடுவதற்கு முன்பே அத்தேர்வின் வினாக்களுக்கான பதிலை வெளியிட வேண்டும் என்று கோரி சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செளகான் ஸ்வாதன்தர் குமார் ஆகியோர், இநத் விவகாரத்தில் சி.பி.எஸ்.இ.-க்கு எவ்வித வழிகாட்டுதலையும் அளிக்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்து விட்டனர்.
