UPDATED : ஜூன் 05, 2011 12:00 AM
ADDED : ஜூன் 05, 2011 11:44 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: சென்னை, ஐதராபாத், மதுரை ஆகியவற்றில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அப்பலோ மருத்துவமனை இடம் தேர்வு செய்துள்ளது.
மருத்துவ கல்வியை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 11 நர்சிங் மற்றும் மருத்துவமனை மேலாண்மை கல்லூரிகளை நடத்தி வரும் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம், தற்போது அடுத்த 2 ஆண்டுகளில் முதன் முறையாக 3 மருத்துவ கல்லூரிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பல மருத்துவ நிறுவனங்களை நாடு முழுவதும் நிறுவ இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெற்றிருப்பதாக அப்பலோ மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி தெரிவித்துள்ளார்.
