தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரத்தாகுமா குரூப் -1 தேர்வு?

ரத்தாகுமா குரூப் -1 தேர்வு?

ரத்தாகுமா குரூப் -1 தேர்வு?


UPDATED : ஜூன் 06, 2011 12:00 AM

ADDED : ஜூன் 06, 2011 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2011 12:00 AM ADDED : ஜூன் 06, 2011 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள அ.தி.மு.க., அரசு, முந்தைய தி.மு.க., அரசு செயல்படுத்தி வந்த கலைஞர் காப்பீடுத் திட்டம், இலவச கான்கிரீட் வீடு திட்டம், ஒரு ரூபாய் அரிசித் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்து மாற்றியமைத்து வருகிறது.


மாணவர்களின் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கிய சமச்சீர் கல்வித் திட்டமும் மறு ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய செம்மொழி மாநாட்டு பாடல்கள் உள்ளிட்ட அவரது எழுத்துக்கள், சமச்சீர் கல்வி பாட நூல்களில் இடம் பெற்றதுதான் மறு ஆய்வு உத்தரவுக்கு காரணமாக கூறப்படுகிறது.


இந்நிலையில், தமிழ்நாடு பொது தேர்வாணையம் சார்பில் குரூப்-1 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் இடம் பெற்ற சில கேள்விகள் எளிதாக இருந்தாலும், சில கேள்விகள் கடந்த தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை குறிப்பதாக உள்ளன. இதனால், தேர்வு ரத்து செய்யப்படுமோ என தேர்வு எழுதியவர்கள் கவலை அடைந்துள்ளனர்.


தேர்வு எழுதி முடித்த சிலர் கூறியதாவது: தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள் எளிதாக விடை அளிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. முந்தைய தி.மு.க., கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. "இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?&', 2010ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில் எத்தனாவது?, பொது வினியோக முறையின் கீழ் ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம் எது?, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிக்கும் திட்டம் 100 நாட்கள் வேலை கொடுப்பதற்காக எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? ஆகிய கேள்விகள் குறிப்பாக முந்தைய அரசின் சாதனைகளை விளக்குவதாக உள்ளது.


முந்தைய தி.மு.க., அரசின் சாதனைத் திட்டங்களை ரத்து செய்து வரும் இப்போதைய அரசு, தேர்வில் இடம் பெற்றுள்ள சில கேள்விகளுக்காக தேர்வையும் ரத்து செய்து விடுமோ என பயப்படுகிறோம், என்றனர்.


மே மாதம் நடைபெறுவதாக இருந்த குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு, முந்தைய தி.மு.க., அரசால் வெளியிடப்பட்டது என்பதும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் முந்தைய ஆட்சியில் தொகுக்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us