தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரேங்க் மாணவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது

ரேங்க் மாணவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது

ரேங்க் மாணவர்களை விளம்பரத்திற்கு பயன்படுத்தக் கூடாது


UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM

ADDED : ஜூன் 07, 2011 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM ADDED : ஜூன் 07, 2011 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2009ம் ஆண்டு நடந்த ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. மற்றும் ஏ.ஐ.இ.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்ற நிதின் ஜெயின், எப்.ஐ.டி.ஜே.இ.இ. மற்றும் ஆகாஷ் ஐ.ஐ.டி.-ஜே.இ.இ. பயிற்சி மையங்கள் நிதிஷின் அனுமதியின்றி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


நிதின் மற்றும் அவரது பெற்றோர் சார்பில் பயிற்சி மையங்களின் இயக்குநர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை நீதிபதி கீதா மிட்டல், விசாரித்தார்.


விசாரணை முடிவில், முதல்நிலை மாணவர்களின் புகைப்படம், பெயர், வீடியோ போன்றவற்றை, பயிற்சி மையங்கள் அனுமதியின்றி தங்களது விளம்பரம், புத்தகம், நாளிதழ், இணைதயளம் என எதிலும் பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்தார்.


மேலும், இது குறித்து பேசிய நிதின் வழக்கறிஞர், விளம்பரத்தில் நிதினின் பெற்றோர் சாதாரண ஆடையில் இருப்பது போன்று வீடியோக்கள் இடம்பெற்றிருப்பதால், மன உளைச்சலுக்கு ஆளானார்கள். எனவே, அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியுள்ளோம் என்று கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us