தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் மட்டுமே பத்தாம் வகுப்பு பதிவு நடத்த உத்தரவு

பள்ளிகளில் மட்டுமே பத்தாம் வகுப்பு பதிவு நடத்த உத்தரவு

பள்ளிகளில் மட்டுமே பத்தாம் வகுப்பு பதிவு நடத்த உத்தரவு


UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM

ADDED : ஜூன் 10, 2011 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM ADDED : ஜூன் 10, 2011 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 11 லட்சத்து, 16 ஆயிரத்து, 143 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, கடந்த, மே 27ல் வெளியானது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளியில் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் திட்டம் துவக்கப்பட்டது. அதே போன்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளியில் பதிவு நடக்கும். இதற்காக, ஜூன் 20ல் மதிப்பெண் சான்று வழங்கப்படும்.


வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து, பதிவதால் தள்ளு முள்ளு ஏற்படுவதுண்டு. இதை தவிர்க்கவே, பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதியும் திட்டத்தை, அரசு அறிமுகம் செய்தது.


பதிவு முறை: வரும், 20 முதல், ஜூலை 5 வரை பதிவு நடக்கும். இதற்கான சீனியாரிட்டி, ஜூன் 20ம் தேதியிட்டு வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களும் பதியலாம். பள்ளிகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க, தலா ஒரு பள்ளிக்கு இரண்டு கம்ப்யூட்டர், இரண்டு ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும்.


பள்ளியை தவிர வேறு எங்கும் பதிவு செய்யக் கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு அவசியம். இந்த உத்தரவுகளை, சந்தோஷ் கே மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us