பாரதிதாசன் பல்கலையில் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கல்வி
பாரதிதாசன் பல்கலையில் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கல்வி
UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM
ADDED : ஜூன் 10, 2011 10:54 AM
திருச்சி பாரதிதாசன் பல்கலை சுற்றுச்சூழல் மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரதிதாசன் பல்கலையில், 2005ம் ஆண்டு எம்.பி.ஏ., சுற்றுச்சூழல் மேலாண்மை துறை துவங்கப்பட்டது. இத்துறையின் முக்கிய நோக்கம் பிரச்னைகளை, இனம் கண்டு அதற்கு தாங்களாகவே தீர்வு காணும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதாகும்.
இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பான இக்கல்வி முறை தனித்தன்மை வாய்ந்த பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், நவீன மேலாண்மை கொள்கை, நுண்ணிய மற்றும் பேரியல் பொருளாதாரம், புள்ளியியல் மற்றும் அறிவியல் நுணுக்கங்கள், சுற்றுச்சூழவியலும் சுற்றுச்சூழலும் இணைப்பட்ட சுற்றுச்சூழலியல் நுணுக்கங்கள், சுற்றுச்சூழல் விளைவுகளும் மதிப்பீட்டியலும், கழிவு மேலாண்மை மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழலியல், சுற்றுச்சூழலியல் சட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இத்துறையில் சேர விருப்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை பல்கலையின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, 300 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை இணைத்து, "ரவிச்சந்திரன், தலைவர் மற்றும் பேராசிரியர், சுற்றுச்சூழல் மேலாண்மைத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி- 24" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
