தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 உடனடித்தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 உடனடித்தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 உடனடித்தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM

ADDED : ஜூன் 10, 2011 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM ADDED : ஜூன் 10, 2011 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்தவர்களுக்காக, வரும் 22 முதல் ஜூலை 2 வரை உடனடித்தேர்வு நடத்தப்படுகிறது.


இதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க தவறியோர், தத்கல் திட்டத்தின் கீழ், வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை கிடைக்கும்.


இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், தேர்வுக் கட்டணத்துடன், சிறப்புக்கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சென்னையிலுள்ள தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, அப்போதே ஹால் டிக்கெட் வழங்கப்படும்.


இதில், விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சென்னையில் மட்டும் தான் தேர்வு மையம் அமைக்கப்படும். மற்ற இடங்களில் அமைக்கப்படாது. இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us