UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM
ADDED : ஜூன் 11, 2011 10:44 AM
தமிழகத்தைச் சேர்ந்த, 15 ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், இரண்டாண்டுகள் கழித்து, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தாண்டுக்கான பட்டியல், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகம் மூலம், சென்னை தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டியல் இறுதி செய்யப்பட்டு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆசிரியர்களின் பல்வேறு சிறப்பு செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தை சேர்ந்த, 15 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1)திருச்சி, சேவா சங்கம் தஞ்சம்மாள் நினைவு துவக்கப்பள்ளி - தலைமையாசிரியை விசாலாட்சி.
2)திண்டுக்கல் , நத்தம் யூனியன் காசம்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி - தலைமையாசிரியை அமுதா தேவி.
3)காஞ்சிபுரம், வாலாஜாபாத் யூனியன் சிட்டியம்பாக்கம் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியை சாலா.
4)சென்னை, அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியை லூர்து ராணி.
5)தஞ்சை, கும்பகோணம் கோட்டையூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியர் பன்னீர்செல்வம்.
6)புதுக்கோட்டை, ஆலங்குடி நெடுவாசல் வடக்கு பஞ்சாயத்து துவக்கப்பள்ளி - தலைமையாசிரியர் கருப்பையன்.
7)கிருஷ்ணகிரி, ஓசூர் காமராஜ் காலனி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியர் சம்பத்.
8)கரூர், கோடங்கிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி - தலைமையாசிரியர் ராமசாமி.
9)மதுரை, ஞானவொளிபுரம் ஆர்.சி., துவக்கப் பள்ளி - ஆசிரியர் ஜெயசீலன்.
10)சென்னை, ஞானப்பா தெரு ராமலிங்க மிஷன் நடுநிலைப்பள்ளி - தொழிற்கல்வி ஆசிரியர் நவாப்ஜான்.
11)கோவை, சுல்தான்பேட்டை யூனியன் எஸ்.அய்யம்பாளையம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியர் ராமசாமி.
12)விருதுநகர், ராஜபாளையம் பருத்தி மார்க்கெட் என்.ஏ., பாப்புராஜா நினைவு நடுநிலைப்பள்ளி - தலைமையாசிரியர் வெங்கட்ராமன்.
13) திருவாரூர், திருத்துறைப்பூண்டி யூனியன் விளாங்குடி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி - தலைமையாசிரியை ராஜகுமாரி.
14)திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சிங்காரத்தோப்பு பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளி - தலைமையாசிரியர் சாமுவேல் ஜெபராஜ்.
15) மதுரை டி.வாடிப்பட்டி பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி - தலைமையாசிரியர் சகாதேவன்.
வரும் செப்., 5ம் தேதி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, டில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் ஆசிரியர் தினவிழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் விருதுகளை வழங்குகிறார்.
