UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM
ADDED : ஜூன் 11, 2011 10:50 AM
பாரதி யுவ கேந்திரா சார்பில் இசை, படிப்பு, ஓவியம், விளையாட்டு, சமூகப்பணி, பரதம், பேச்சு, கவிதை, சமூகப்பணியில் சிறந்த, எல்.கே.ஜி.,-பிளஸ் 2 மாணவர்களுக்கு யுவஸ்ரீ கலா பாரதி, கல்லூரி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரியின் அனைத்து மாவட்டத்திலும் நடக்கும் நிகழ்ச்சியில், கோவை ஆர்ஷ வித்யா பீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி, கருமாத்தூர் விவேகானந்த சேவாஸ்ரம் தலைவர் சுவாமி ஸதா சிவானந்தா பங்கேற்கின்றனர்.
தகுதியானவர்கள் நெல்லை பாலு, நிறுவனர், பாரதி யுவ கேந்திரா, எப்.171, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை 16, க்கு 10 ரூபாய் ஸ்டாம்ப் ஓட்டிய சுய முகவரி கவருடன் அனுப்பலாம்.
தொடர்புக்கு 94426-30815. கடந்த மூன்று ஆண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
