தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய கல்விக் கட்டணம் 13ல் வெளியீடு

புதிய கல்விக் கட்டணம் 13ல் வெளியீடு

புதிய கல்விக் கட்டணம் 13ல் வெளியீடு


UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM

ADDED : ஜூன் 11, 2011 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM ADDED : ஜூன் 11, 2011 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள 6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணத்தை நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு 13ம் தேதி வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகமான கட்cணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க, கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


அந்த குழு நிர்ணயித்த கல்வி கட்டணம் போதாது என்று கூறி 6,400 பள்ளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.


இதைத் தொடர்ந்து அந்த பள்ளிகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், குழுத் தலைவராக இருந்த கோவிந்தராஜன் ஓய்வு பெற்றதால், நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு பள்ளியாக ஆய்வு செய்து புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளார்.


அந்த புதிய கட்டண விவரங்கள் வரும் 13ம் தேதி வெளியிடப்படும் என்று ரவிராஜ பாண்டியன் குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேல் முறையீடு செய்த பள்ளிகளின் இறுதியாணையை 13ம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். அவர்கள் மூலம் பள்ளிகளுக்கு கட்டணம் தெரிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us