தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வளாகத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வளாகத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் வளாகத்தேர்வு


UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM

ADDED : ஜூன் 11, 2011 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM ADDED : ஜூன் 11, 2011 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

"திருச்சி பாரதிதாசன் பல்கலையில் படித்து முடித்த மாணவர்களும் பங்கேற்கும் வகையில், "ஆஃப் கேம்பஸ்" வளாகத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது" என்று பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.


திருச்சியில், "நாஸ்காம்" மற்றும் "டேலன்ட் ப்ரோ" சார்பில், கல்வி பயிலும் பொழுதே மாணவர்களை கார்ப்பரேட் நிறுவன வேலைக்கு தயார் செய்யும் "கேம்பஸ் டூ கார்ப்பரேட்" நிகழ்ச்சி நேற்று நடந்தது.


விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசியதாவது:
வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை, தொழில்நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இடைவெளியை நிரப்பும் வகையில் இணைப்புப்பாலம் தேவை. படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர்களை ஆசிரியர்கள் வழிநடத்தி, மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களிடையே உள்ள தனித்திறனை பட்டியலிட வேண்டும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தொழில் நிறுவனங்கள் சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கின்றனர். பாடத்திட்டம் கவனமாக வடிவமைத்திருக்க வேண்டும். இறுதியாண்டு என்றில்லாமல் முதல் ஆண்டில் இருந்தே மாணவர் அதை கற்க வேண்டும்.


பாரதிதாசன் பல்கலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அதுதொடர்பான படிப்புகள் அனைத்தும் தொழில்நிறுவனங்களுக்கு ஏற்றவாறு முதலாம் ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு பாடத்தை மாற்றும் பணி நடக்கிறது. டி.டி.பி., டேட்டா என்ட்ரி, டிப்ளமோ இன் பி.பி.ஓ., போன்ற வேலைவாய்ப்புகள் நிறைந்த படிப்புகள் அனைத்து பட்டதாரிகளும் பயிலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பல்கலை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு, ஐ.இ.சி.டி., சார்பில், ஜூலை 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு, ஐ.டி., குறித்த கம்ப்யூட்டர் பயிற்சி நடக்கிறது. ஜூலை மாதம், கார்ப்பரேட், சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களை அழைத்து, பல்கலையில் கூட்டம் நடக்கிறது. தமிழக அரசின் ஐ.டி., செயலாளர் பங்கேற்க வாய்ப்புள்ளது. பல்கலையில் படித்து முடித்த மாணவர்களும் பங்கேற்கும் வகையில், "ஆஃப் கேம்பஸ்" வளாகத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. பல நிறுவனங்கள் பங்கேற்க நாஸ்காமின் உதவி மிக அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.


விழாவில், "நாஸ்காம்" மண்டல இயக்குனர் புருஷோத்தமன், "டேலன்ட் ப்ரோ"  துணைத்தலைவர் ஸ்ரீகுமார், பாரதிதாசன் பல்கலை ஐ.டி., துறைத்தலைவர் கோபிநாத் கணபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


திருச்சி வரும் ஹெச்.சி.எல்.,"நாஸ்காம்" மண்டல இயக்குனர் புருஷோத்தமன் பேசும்போது, "2020ம் ஆண்டில், ஐ.டி., மற்றும் அது தொடர்பான வேலைக்கு ஒரு கோடி பேர் தேவை. தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் பொறியாளர்களும், 20 லட்சம் கலை, அறிவியல் மாணவர்களும் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். அதில், தகுதியான மாணவர்கள் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே. திருச்சிக்கு ஹெச்.சி.எல்., டபிள்யூ.என்.எஸ். போன்ற பெரிய நிறுவனங்கள் வரவிருக்கின்றன. அவர்களின் தேவைக்கேற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளவேண்டும்" என்றார்.
 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us