தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணியிடங்கள் கூடியதால் குரூப்-2 தேர்வு தள்ளிவைப்பு

பணியிடங்கள் கூடியதால் குரூப்-2 தேர்வு தள்ளிவைப்பு

பணியிடங்கள் கூடியதால் குரூப்-2 தேர்வு தள்ளிவைப்பு


UPDATED : ஜூன் 12, 2011 12:00 AM

ADDED : ஜூன் 12, 2011 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2011 12:00 AM ADDED : ஜூன் 12, 2011 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு


2,366 இடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு, வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


நிதித்துறை உதவிப் பிரிவு அலுவலர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உட்பட 4,329 பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-2 தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டிருந்தது. இதற்கான தேர்வு, ஜூலை 3ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வில், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை உதவி அலுவலர் போன்ற பணியிடங்கள் சேர்க்கப்படவில்லை.


இவற்றையும் சேர்த்து தேர்வு நடத்தும் வகையில், ஜூலை 3ம் தேதி நடத்த இருந்த தேர்வை, ஜூலை 30ம் தேதிக்கு தள்ளி வைத்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன்படி, சட்டம் மற்றும் நிதித்துறையில் ஏற்கனவே அறிவித்தது தவிர, மேலும் 281 உதவி பிரிவு அலுவலர்கள், கருவூலங்கள் மற்றும் கணக்கு துறைகளில் 485 கணக்காளர்கள், ஊராட்சி வளர்ச்சி முகமை, பஞ்சாயத்து ராஜ் துறைகளில் 1,600 உதவியாளர்கள் என 2,366 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.


ஏற்கனவே, 4,329 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கூடுதல் பணியிடங்களையும் சேர்த்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 6,695 ஆக உயர்ந்துள்ளது. தேர்விற்கு, வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கவும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், இதற்கு தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. அந்த விண்ணப்பங்கள் புதிய பணியிடங்களுக்காகவும் கருத்தில் கொள்ளப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us