தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்-ஆப் மார்க் பயமா?

கட்-ஆப் மார்க் பயமா?

கட்-ஆப் மார்க் பயமா?


UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM

ADDED : ஜூன் 19, 2011 04:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM ADDED : ஜூன் 19, 2011 04:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் எது சிறந்த கல்லூரி, எது சிறந்த பாடப்பிரிவு, நமக்கு எந்த பாடம் சரியாக வரும் என்று தீர்மானிப்பதில் மாணவர்கள் அதிகம் குழம்ப தேவையில்லை.


கடந்த ஆண்டு 268 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஏறத்தாழ 65 ஆயிரம் இடங்கள் இருந்தன. தற்போது 300 இன்ஜினியரிங் கல்லூரிகள் கவுன்சிலிங் போது பட்டியிலிடவிருக்கிறார்கள். விண்ணப்பித்த அனைவருக்கும் இன்ஜினியரிங் சீட் கிடைக்கும். ஆனால் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைக்குமா அதுதான் இப்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கேள்விக்குறி. உங்கள் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் பாடபிரிவையும், கல்லூரியையும் தேர்வு செய்ய வேண்டும்.


இதோ...பொதுப்பிரிவில் உள்ளவர்கள் இன்ஜினியரிங் பிரிவுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால்  எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளில் முதல் ஐந்து இடத்துக்குள் உள்ள சிறப்பான அரசு கல்லூரிகளில் சீட் கிடைக்க பிற்பட்ட வகுப்பினராக இருந்தால் 195, மிகவும் பிற்பட்ட வகுப்பினராக இருந்தால் 190, ஆதிதிராவிடர்களாக இருந்தால் 185 கட் ஆப் மதிப்பெண் இருந்தால் அக்கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.


அந்தந்த மாவட்டத்தில் உள்ள நல்ல சுயநிதி கல்லூரிகளில் அரசு இடம் கிடைக்க கட்-ஆப் 185க்கு குறையாமல் இருந்தால் நல்லது. கட்-ஆப் 185க்கும் குறையாமல் எடுக்கும் மாணவர்கள் எது சிறந்த கல்லூரி என்பதில் கவனம் செலுத்தி அங்கு இடம்பெறுவதில் கவனம் செலுத்தலாம்.


கட்-ஆப் குறையும் பட்சத்தில் நீங்கள் விரும்பும் பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். கிடைக்கும் கல்லூரிகளில் நல்ல கல்லூரியை தேர்வு செய்து படிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us