தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் அறிவிப்பு

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் அறிவிப்பு

தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் அறிவிப்பு


UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM

ADDED : ஜூன் 14, 2011 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM ADDED : ஜூன் 14, 2011 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சராசரியாக உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை குழு வெளியிடவில்லை. எனினும், அனைத்துப் பள்ளிகளுக்கும், 10 முதல், 15 சதவீதம் வரை, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில், 10 ஆயிரத்து, 400 தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவை, அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருவதாக, முந்தைய ஆட்சியில் தொடர்ந்து புகார்கள் சென்றதால், கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அதனடிப்படையில், சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன், குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், கடந்த கல்வியாண்டில் வெளியிட்ட கட்டண விவரங்கள் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, 6,355 பள்ளிகள், குழுவிடம் மேல் முறையீடு செய்தன.


இதற்கிடையே, கோவிந்தராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன், புதிய தலைவராக பொறுப்பேற்றார். நவம்பர் 15ம் தேதி முதல், கடந்த மாதம் 4ம் தேதி வரை, ஏழு மாதம், மேல் முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடந்தது. மாவட்ட வாரியாக, பள்ளி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு, அவர்களிடம் பள்ளியைப் பற்றிய முழுமையான விவரங்கள், வருவாய் மற்றும் செலவு விவரங்கள், அது தொடர்பான ஆவணங்கள், எதிர்பார்க்கும் கட்டண உயர்வு விவரத்தை பெற்று ஆய்வு செய்து, அதனடிப்படையில் புதிய கட்டணத்தை குழு நிர்ணயித்தது.


இந்த விவரங்களை, கட்டண நிர்ணயக்குழுவின் சிறப்பு அலுவலர் திருஞானசம்பந்தம், நேற்று காலை 11 மணிக்கு வெளியிட்டார். சராசரியாக குறைந்தபட்ச உயர்த்தப்பட்ட கட்டணம், அதிகபட்ச கட்டணம் ஆகிய விவரங்களை, சிறப்பு அலுவலர் தெரிவிக்கவில்லை. எனினும், அனைத்துப் பள்ளிகளுக்கும், 10 முதல், 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து, கட்டண விவரங்களை பெறுவதற்காக, பணியாளர்கள் நேற்று வந்திருந்தனர். அவர்களிடம், கட்டண பட்டியலை திருஞானசம்பந்தம் ஒப்படைத்தார். இந்த பட்டியல்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு சென்றதும், அங்கிருந்து பள்ளி நிர்வாகத்தினர் பெற்றுக் கொள்ள வேண்டுமென, அவர் தெரிவித்தார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பள்ளி அமைவிடம், மாணவர் எண்ணிக்கை, உள் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர், பணியாளர் சம்பளம், நிர்வாக பராமரிப்புச் செலவுகள் ஆகியவை, மறு கட்டண நிர்ணயத்திற்கு உரிய அம்சங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணய சட்டத்தின்படி, அங்கீகாரம் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், கட்டண நிர்ணயம் பொருந்தும். தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த பள்ளிகளுக்கு, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், சம்பந்தப்பட்ட பள்ளிகள், தொடர் அங்கீகாரத்தை பெற்ற பிறகே, புதிய கட்டணம் அமலுக்கு வரும்.


தொடர் அங்கீகார காலம் முடிந்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத பள்ளிகள், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகள் ஆகியவற்றுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளுக்கு, கடந்தாண்டு மே மாதம் 7ம் தேதி நிர்ணயித்த கட்டண நிர்ணயம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்ற பின், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய கட்டணம், 2011-12, 2012-13 கல்வியாண்டு வரை பொருந்தும் என, கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. இந்த கட்டணமும் திருப்தியாக இல்லை என, பள்ளி நிர்வாகங்கள் கருதினால், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம் என, குழுவின் சிறப்பு அலுவலர் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் மற்றும் சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், கட்டண நிர்ணயக்குழு புதிய கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us