தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திருத்திய கட்டணத்தையும் ஏற்க இயலாது : தனியார் பள்ளிகள்

திருத்திய கட்டணத்தையும் ஏற்க இயலாது : தனியார் பள்ளிகள்

திருத்திய கட்டணத்தையும் ஏற்க இயலாது : தனியார் பள்ளிகள்


UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM

ADDED : ஜூன் 15, 2011 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM ADDED : ஜூன் 15, 2011 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுயநிதியில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டணத்தை, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு வெளியிட்டது. இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகங்களிடம், நேற்று புதிய கட்டண பட்டியலை வழங்கினர். மொத்தம் 310 பள்ளிகளில், 125 மெட்ரிக் பள்ளிகள், 156 நர்சரி பள்ளிகள், 16 மாநில பாடத்திட்ட பள்ளிகள் என, 297 பள்ளிகளுக்கு கட்டணம் வெளியிடப்பட்டது. பல பள்ளிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தின.


மதுரை கோச்சடை செவன்த்டே பள்ளியின் முதல்வர் ரத்னதுரை:கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த போது எங்கள் பள்ளியின் எல்.கே.ஜி., வகுப்புக்கு 5,000 ரூபாய் நிர்ணயித்தனர். மேல்முறையீட்டின் போது நாங்கள் 7,000 ரூபாய் வரை நிர்ணயிக்கும்படி கூறினோம். ஆனால், நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி 4,000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. நாங்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காததால், மற்ற பள்ளிகளை கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்வோம்.


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் பாதுகாப்பு நலச்சங்க மாநில பொதுச் செயலர் ஜி.சுரேஷ்: திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் ஏற்க முடியாது. கடந்த ஆண்டை விட எவ்வகையிலும் கட்டணம் அதிகரிக்கவில்லை. கோவிந்தராஜன் கமிட்டி எல்.கே.ஜி., வகுப்புக்கு 1,000 ரூபாய் நிர்ணயித்தது. நாங்கள் 50 சதவீதம் கூடுதலாக 1,500 ரூபாய் நிர்ணயிப்பர் என எதிர்பார்த்தோம். ஆனால், 1,200 ரூபாய் நிர்ணயித்துள்ளனர்.பல பள்ளிகளில் கீழ் வகுப்புகளுக்கு அதிகமாகவும், மேல் வகுப்புகளுக்கு குறைவாகவும் நிர்ணயித்துள்ளனர். கட்டணம் மூன்று ஆண்டுகளுக்கு என அறிவித்ததையும் ஏற்க இயலாது. மேலும் அங்கீகாரம் பெற்றவை, பெறாதவை என பார்க்கக் கூடாது.


ஏனெனில், விண்ணப்பித்த பள்ளிகளில் பல விரைவில் அங்கீகாரம் பெறும் வாய்ப்பு உள்ளன. எனவே, இது தொடர்பாக கோர்ட்டில் முறையிடுவது குறித்து பரிசீலிப்போம். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் தலையிட்டு, நல்ல முடிவு காண வேண்டும். மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்கு மாநில அளவில் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயிப்பது போல, பள்ளிகளுக்கும் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us