பொறியியல் படிப்பிற்கு விரைவில் தர வரிசைப் பட்டியல் வெளியாகிறது
பொறியியல் படிப்பிற்கு விரைவில் தர வரிசைப் பட்டியல் வெளியாகிறது
UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM
ADDED : ஜூன் 15, 2011 12:37 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, பொறியியல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதால், அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கினர்.
இந்த ஆண்டு, தேர்வு முடிவுக்குப்பின் வழங்க ஆரம்பித்ததால், மாணவர்கள் நிதானமாக யோசித்து விண்ணப்பங்களை வாங்கினர். இதனால், இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்தபின், தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
