UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM
ADDED : ஜூன் 15, 2011 02:35 PM
அ நிறம் | அளவு
கவுன்சிலிங் தொடங்கிவிட்டாலே, மாணவர்களுக்கு பல சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் பெரும்பாலும் கவுன்சிலிங் நடைமுறைகள் பற்றியதாகவே இருக்கும். எனவே, அத்தகைய சில பொதுவான சந்தேகங்களையும், அதற்கான பதில்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.
1) கவுன்சிலிங் கட்டணத்தை டி.டி. எடுக்காமல் நேரடியாகவே கட்டலாமா?
கவுன்சிலிங்
கட்டணத்தை டி.டி. எடுத்து வருவதுதான் நடைமுறை. அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பலரும் நினைத்து வங்கியில் சென்று கால்கடுக்க வரிசையில் நின்று நேரத்தை வீணாக்குகின்றனர். ஆனால், நீங்கள் டி.டி. எடுத்து வருவதை விட, 2 மணிநேரம் முன்னதாகவே வந்து, உரிய கவுண்டரில் பணத்தை கட்டி, அதற்கான சலானை பெற்றுக்கொள்ளலாம். அதைத்தான் அண்ணா பல்கலையும் விரும்புகிறது. இதனால் இரு தரப்பிற்கும் வேலை மற்றும் நேரம் மிச்சமாகிறது. எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.1000 கட்டணமாகவும், இதர பிரிவினருக்கு ரூ.5000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2) விண்ணப்பத்தை அனுப்பும்போது ஒரிஜினல் சான்றிதழ்களையும் அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டுமா?
எக்காரணம்
கொண்டும் அந்த தவறை செய்யக்கூடாது. நீங்கள் விண்ணப்பத்தை முறையாகவும், கவனமாகவும் பூர்த்திசெய்து அனுப்பும்போது, தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே அனுப்ப வேண்டும். கவுன்சிலிங் வரும்போது ஒரிஜினல் சான்றிதழ்களை சரிபார்ப்பிற்காக நேரடியாக கொண்டுவந்து, பின்னர் கவனமாக கொண்டு சென்றுவிட வேண்டும்.3)
கோடிங் சீட் எண் ஏன் அவசியம்?விண்ணப்பிக்கும்போது
, "கோடிங் சீட்" என்னை கண்டிப்பாக குறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதுதான் இறுதியானது. ஏனெனில் முழு கவுன்சிலிங் செயல்பாட்டிற்கும் அதுதான் பதிவு எண்ணாக இருக்கிறது. மேலும் ஒரு &'ரேண்டம்&' எண்ணும் இணைக்கப்படும். ஒருவேளை மதிப்பெண் மற்றும் வயதில் மாணவர்களுக்கிடையே சமமான போட்டி ஏற்பட்டால், இந்த எண் பயன்படுத்தப்படும்.4)
டிஸ்ப்ளே ஹாலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?டிஸ்
ப்ளே ஹாலில், கல்லூரி மற்றும் படிப்பு பற்றிய விவரங்கள் ஓடும். அதைப்பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த இடத்தில் வேறு யாரிடமும் தேவையின்றி பேசி, அவர்கள் சொல்வதைக் கேட்டு, குழப்பிக்கொள்ள வேண்டாம்.5)
கவுன்சிலிங்கின் போது மூன்றாம் நபர் ஆலோசனையை கேட்பது நல்லதா?கவுன்சிலிங்கின்
போது, ஏதாவது சொல்லி உங்களை குழப்புவதற்காகவே அந்த வளாகத்தில் யாராவது அலைந்து கொண்டிருக்கலாம். அவர்கள், பலரிடம் தானாக சென்று பேச்சுக் கொடுத்து ஏதாவது சொல்லி குழப்புவார்கள். அதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால், யோசிக்காமல் நிராகரித்து விடவும்.மேலும்
, பெற்றோருடன் மட்டுமே கவுன்சிலிங் வரவும். வீட்டிலேயே கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகள் பற்றி தெளிவாக திட்டமிட்டுக்கொண்டு வரவும். பெற்றோரும், பிள்ளைகளும் மட்டுமே சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். நண்பர்கள் மற்றும் உறவினர்களை அதிகம் தலையிட விடக்கூடாது. அவர்கள் சொல்வதை சிறிய ஆலோசனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு எது ஒத்துவரும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.6)
பெண்களுக்கு ஏற்ற பொறியியல் படிப்புகள் எவை?அனைத்து
வகையான பொறியியல் படிப்புகளையும் பெண்கள் இன்று மேற்கொள்கிறார்கள். பெண்கள் இதைத்தான் படிக்க வேண்டும் என்ற வரம்புகள் இல்லையென்றாலும், சுரங்க பொறியியல் படிப்பில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.7)
கவுன்சிலிங்கின் போது பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைகள் என்னென்ன?மாற்றுத்
திறனாளிகள் இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு போன்ற பலவித இட ஒதுக்கீடுகள் உண்டு.விளையாட்டு
இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெறும் கவுன்சிலிங்கில் மற்ற தகுதிகள் பார்க்கப்படாது. சம்பந்தப்பட்ட மாணவ-மாணவியரின் கடந்த 4 வருட விளையாட்டு சாதனைகள் மட்டுமே பார்க்கப்படும்.மேலும்
, பொது கவுன்சிலிங் நடைபெறும் முன்பாகவே, மாற்று திறனாளிகள் கவுன்சிலிங் நடைபெறும். அவர்களுக்கென்று 3% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பொதுவாக அந்த இடங்கள் நிரம்பிவிடுவதில்லை. எனவே அதில் மீதி உள்ள இடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும்.8)
கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள கால் லெட்டர் மிகவும் அவசியமா?கவுன்சிலிங்
தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பாகவே உங்களுக்கு கால் லெட்டர் அனுப்பப்படும். ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், அதற்காக பதட்டப்பட வேண்டியதில்லை. கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு, சில மணி நேரங்களுக்கு முன்பே வந்து கேட்டால், டூப்ளிகேட் கால் லெட்டர் கொடுப்பார்கள். எனவே கவலை வேண்டாம்.9)
கல்லூரி கோட் -ஐ குறித்துக் கொள்ளவில்லை என்றால் சிக்கலாகிவிடுமா?ஒரே
மாதிரி பெயர்களில் பல கல்லூரிகள் இருக்க வாய்ப்புண்டு. எனவே நமக்கு தேவையான கல்லூரியை எளிதில் அடையாளம் காண, அந்த "கோட்" மிகவும் முக்கியம்.பெயர்கள்
ஒரேமாதிரி இருந்தால், நீங்கள் கல்லூரியை மாற்றி தேர்வு செய்துவிட வாய்ப்புகள் அதிகம். பிறகு மாற்ற இயலாது.10)
பொறியியல் படிப்பிற்கு வயதுவரம்பு உண்டா?மெரைன்
இன்ஜினீயரிங் படிப்பிற்கு மட்டும் அதிகபட்ச வயதுவரம்பு 25 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்ற எந்த பொறியியல் படிப்பிற்கும் வயது வரம்பு கிடையாது.11)
ஒரு கல்லூரியை மற்றும் அதில் ஒரு படிப்பை தேர்வுசெய்துவிட்டு, விரும்பவில்லை எனில், அதை மாற்ற முடியுமா?கண்டிப்பாக
முடியாது. ஒரு தடவை தேர்வு செய்துவிட்டால் அவ்வளவுதான். எனவே நன்கு யோசித்து முடிவு செய்யவும்.12)
ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்ட பிறகு, மருத்துவ பரிசோதனை எப்போது நடைபெறும்?அண்ணா
பல்கலையில் சேர்ந்தால் ஒதுக்கீட்டு உத்தரவு பெற்றவுடன், அங்கேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். பிற கல்லூரிகளில் சேர்ந்தால், அண்ணா பல்கலையிலும் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரியிலும் செய்து கொள்ளலாம்.13)
கவுன்சிலிங் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது எப்படி?கவுன்சிலிங்
பற்றிய உடனடி புள்ளி விவரங்கள் அனைத்தும், அண்ணா பல்கலை இணையதளத்திலேயே கிடைக்கும். மொத்தம் 8 பிரிவுகளாக நடக்கும் கவுன்சிலிங் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும்.14)
கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள, ஆரம்பிக்கும் நேரத்திற்கு மிகவும் முன்னதாகவே வந்துவிட வேண்டுமா?கவுன்சிலிங்கில்
நேரம் என்பது மிகவும் முக்கியம். கவுன்சிலிங் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணிநேரம் முன்பாக வந்து விடுதல் நல்லது. ஏனெனில் அப்போதுதான் நாம் எந்தவித பதட்டமுமின்றி, அங்கே உள்ள சூழலை உணர்ந்து, பணம் கட்டி, எந்தெந்த இடம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து ரிலாக்சாக முடியும்.அந்த
சூழலுக்கு நீங்கள் பழக்கப்படும்போதுதான், பதட்டம் குறைந்து, கவுன்சிலிங் நடைமுறையில் கலந்துகொள்ளும்போது நம்மால் தெளிவாக முடிவெடுக்க முடியும். வெளியூரிலிருந்து வருபவர்கள், முதல்நாளே சென்னை வந்துவிடுதல் நல்லது. அது இயலாதவர்கள், கவுன்சிலிங் அன்று, அதிகாலையிலேயே சென்னை வந்து சேர்ந்துவிடுமாறு, பயணத்திட்டத்தை வகுப்பது மிகவும் முக்கியம்.15)
கவுன்சிலிங்கிற்கு தயாராக வருதல் என்றால் என்ன?தேவையான
ஆவணங்களுடன் சரியான நேரத்தில் வருவது என்பதும் இதில் அடங்கினாலும், மனதளவில் தயாராகி வருவதையே இந்த வார்த்தைகள் முக்கியமாக குறிக்கின்றன. எந்த கல்லூரியில் படிக்கப் போகிறோம், என்ன பாடத்தை தேர்வுசெய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தெளிவாக திட்டமிட்டு, யார் குழப்பினாலும் குழம்பாதவாறு முடிவுசெய்து வர வேண்டும்.கவுன்சிலிங்
நடைபெறும் இடத்திற்கு வந்து அதுபோன்ற விஷயங்களை முடிவுசெய்தல் என்பதைவிட, ஆபத்தான விஷயம் எதுவுமில்லை. குடும்பத்தோடு அமர்ந்து, பலர் வழங்கிய ஆலோசனைகளை விவாதித்து ஒரு திடமான முடிவெடுத்து தயாராக வர வேண்டும். கடைசி நேரத்தில் மாற்றம் செய்யக்கூடாது.
