தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரிய பள்ளிகளுக்கு கட்டணம் கிடு கிடு உயர்வு

பெரிய பள்ளிகளுக்கு கட்டணம் கிடு கிடு உயர்வு

பெரிய பள்ளிகளுக்கு கட்டணம் கிடு கிடு உயர்வு


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 16, 2011 11:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 16, 2011 11:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நர்சரி, பிரைமரி மற்றும் சில மெட்ரிக் பள்ளிகளுக்கு குறைவாக கட்டணம் நிர்ணயித்ததால், கடும் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், பெரிய தனியார் பள்ளிகளுக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணத்தை உயர்த்தி, ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்துள்ளது. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, 100 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


மேல் முறையீடு செய்த, 6,355 தனியார் பள்ளிகளுக்கு, 14ம் தேதி புதிய கட்டணம் வெளியிடப்பட்டது. இதில், பாதி பள்ளிகளுக்கு மட்டுமே, முதல் நாள் புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டது. பெரிய பள்ளிகளுக்கு, முதல் நாள் கட்டணம் அறிவிக்கப்படவில்லை. இந்த பள்ளிகளுக்கு, நேற்று புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டது.


சென்னை மாவட்டத்தில், 242 பள்ளிகளுக்கு நேற்று கட்டணம் அறிவிக்கப்பட்டன. இதில், பெரும்பாலான பள்ளிகள், சிறந்த உள் கட்டமைப்பு வசதி கொண்ட பெரிய பள்ளிகள். இப்பள்ளிகளின் நிர்வாகிகளே எதிர்பார்க்காத அளவுக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணத்தை உயர்த்தி, குழு அறிவித்துள்ளது. அதிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கான கட்டணம், 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.


சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,க்கு ஏற்கனவே, 3,000 ரூபாய் கட்டணம் இருந்தது. இது, தற்போது, 6,750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர வகுப்புகளுக்கு, கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.


இப்பள்ளியின் தாளாளர் கூறும்போது, "பள்ளியின் உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களுக்கு நாங்கள் கொடுக்கும் சம்பளம், இதர செலவுகள் ஆகிய அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்து, அதனடிப்படையில் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இந்த கட்டண உயர்வு, எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது. பெரிய பள்ளிகள் அனைத்திற்கும், இரண்டரை மடங்கு அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us