தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரேண்டம் மற்றும் ரேங்கிங் பற்றி தெரிந்து கொள்வோம்

ரேண்டம் மற்றும் ரேங்கிங் பற்றி தெரிந்து கொள்வோம்

ரேண்டம் மற்றும் ரேங்கிங் பற்றி தெரிந்து கொள்வோம்


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 21, 2011 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 21, 2011 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுன்சிலிங் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக ரேண்டம் எண், 10 நாட்களுக்கு முன் ரேங்கிங் வழங்கப்படும்.  ஒரு மாதம் வரை  கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங்போது இந்த இரண்டு எண்களுமே முக்கியமானவை. ரேண்டம் எண்ணுக்கு மிக முக்கியமான பணி இருக்கிறது.


பொதுவாக ரேங்க் பட்டியல் தயாரிக்கும்போது ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பலர் மோதும் நிலைமை  சில நேரங்களில் ஏற்படுகிறது. அப்போது ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கவே இந்த ரேண்டம் எண். ரேண்டம் எண் வழங்கப்பட்ட பின்னர்தான் ரேங்கிங் அறிவிக்கப்படுகிறது.


ரேங்கிங் கணக்கிடும்போது, சிலருக்கு ஒரே "கட்ஆப்" மதிப்பெண் இருக்கும். ஒரே "கட்ஆப்" மதிப்பெண்ணில் யார்  கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு ரேங்க் முன்னுரிமை கொடுக்கப்படும். அதன்பின்னர் இயற்பியலில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த இரண்டிலும் அதே மதிப்பெண் பெற்றவர்கள் வேதியலிலும் அதே மதிப்பெண்தான் பெறுவார்கள். இதற்கடுத்து, பிறந்த நாள் அடிப்படையில், வயதில் மூத்தவருக்கு  முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்தான் ரேண்டம் எண்ணில் யாருக்குப் பெரிய எண் என்று பார்க்கப்படும் அதன் அடிப்படையில் ரேங்க்  வழங்கப்படும். கடந்த ஆண்டு ரேங்கிங்போது, 10 அல்லது 20 பேருக்குத்தான் இந்த ரேண்டம் அடிப்படையில் ரேங்கிங் நிர்ணயிக்க வேண்டிய அவசியம்  வந்தது.  ரேங்கிங் நிர்ணயித்த பின்னர், அது அண்ணா பல்கலைக்கழக வெப்சைட்டில்  வெளியிடப்படும்.



விண்ணப்பத்துடன் ஜாதி சான்றிதழ்களை இணைக்கத் தவறியோர், பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பார்கள். உரிய சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பித்த பின்னர், பொதுப் பிரிவிலிருந்து கம்யூனிட்டி ரேங்கிங்கில் சேர்க்கப்படுவார்கள். அப்போது, ரேங்க் எண்களில் இரு முழு எண்களுக்கு இடையில் 0.25 அல்லது 0.50 அல்லது 0.75 சேர்க்கப்படும். இதனால் மற்ற மாணவர்களது ரேங்கிங் மாறாது. உதாரணமாக 15651.25  என்று வழங்கப்படும். மற்ற மாணவர்களுக்கு முழு எண்ணாக ரேங்கிங் இருக்கும்.



ரேங்கிங் அறிவித்த பின்னர், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். ரேங்கிங் வரிசைப்படி எந்ததெந்த நாட்களில் கவுன்சிலிங் என்பது பத்திரிகைகளில் வெளியாகும். அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் கூட, அந்த நாளில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். கவுன்சிலிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, மாணவர்கள் வெப்சைட்டில் விபரங்களை அறிந்து கொள்ளலாம். கவுன்சிலிங் நாளுக்கு முந்தைய நாள் இட விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும். இன்டர்நெட்டிலும், கவுன்சிலிங் செல்லும்  முன்பாக உள்ள விளக்கவுரை அரங்கிலும் மாணவர்கள் இட நிலவரங்களை அறிந்து  கொள்ளலாம்.



மாணவர் உடன் வருபவர், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக முடிவு  செய்பவராக இருக்க வேண்டும். கவுன்சிலிங் துவங்குவதற்கு 130 மணி நேரத்திற்கு முன்பாக மாணவர் அங்கு இருக்க வேண்டும். ஒருவேளை, ரேங்கிங், மறுமதிப்பீடு தொடர்பாக விபரங்களை அப்டேட் செய்ய விரும்புவோர், 3 மணி நேரத்துக்கு முன்பாக வர வேண்டும்.



கவுன்சிலிங் வருவோர், 5 ஆயிரம் ரூபாய்க்கான அட்வான்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். கவுன்சிலிங் வளாகத்திலேயே அதைக் கட்டலாம். அப்போது மாணவர் தொடர்பான விபரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும்.



விளக்கவுரை நடக்கும் ஹாலுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். அங்கு மாணவர்  வந்ததற்கான வருகை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின், கவுன்சிலிங்  ஹால் செல்வதற்காக விளக்கவுரை ஹாலில் அமர வேண்டும். அங்கு கவுன்சிலிங்  நடைமுறைகள் மாணவர்களுக்கு விளக்கப்படும். பெரிய ஸ்கிரீனில் சமீபத்திய இட நிலவரங்கள் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும். அதனால் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்புள்ளதா என்பதை விளக்கவுரை ஹால் வரை தெரிந்து கொள்ளலாம்.



அதன்பின்னர், கவுன்சிலிங் அறைக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். அங்கு சர்டிபிகேட் வெரிபிகேஷன் நடைபெறும். சான்றிதழ்களில் ஏதாவது விடுபட்டு போயிருந்தால் அல்லது வேறு ஏதாவது சிக்கல்கள் இருந்தால் தங்களைப் பற்றி முழுத்தகவல்களை அப்டேஷன் பிரிவில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின் கவுன்சிலிங் நடைபெறும் பகுதிக்கு  மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். இங்கு கல்லூரியை தேர்வு செய்யும் போது, ஒரே மாதிரியான பெயர்களில் பல இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கும். ஒரு முறை கல்லூரியை  தேர்வு செய்து முடித்துவிட்டால், மாணவர் அடுத்த கல்லூரியை தேர்வு செய்ய முடியாது. ஆகவே, கல்லூரியின் "கோட்" எண்ணை மிகக் கவனமாக மாணவர் தெரிந்து வர வேண்டும். அது விளக்கக் குறிப்பில் உள்ளது.



ரேங்க் அடிப்படையில் தன்னுடைய முறை வந்தவுடன் மாணவர், தான் தேர்வு செய்த  கல்லூரி மற்றும் பாடப்பிரிவை உறுதி செய்ய வேண்டும். உங்களது முடிவுப்படி ஒரு முறை உங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு விட்டால் மாற்ற முடியாது என்பதால் அந்நேரத்தில் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். இடத்தை தேர்வு செய்தவர்கள், அதற்கான இட ஒதுக்கீட்டு சான்றிதழை (அலாட்மென்ட் லெட்டரை) பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்பலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us