தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு இட ஒதுக்கீடு விவரம்

சிறப்பு இட ஒதுக்கீடு விவரம்

சிறப்பு இட ஒதுக்கீடு விவரம்


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 16, 2011 03:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 16, 2011 03:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், மாற்று திறனாளிகள் மற்றும் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு சிறப்பு பிரிவினருக்கும் பிரத்யேக கூடுதல் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.


முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகங்களில் 4 இடங்கள், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் 4 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 108 இடங்கள் என மொத்தம் 150 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் 10 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.


தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 இடங்கள், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் அனைத்திலும் சேர்த்து 88 இடங்கள் என மொத்தம் 100 இடங்கள். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


ஒற்றைச் சாளர முறையில் இடம்பெறும் மொத்த இடங்களில் காதுகேளாதோர், கண் பார்வையற்றோர், பிற உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தலா ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us