தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போலி அனிமேஷன் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை

போலி அனிமேஷன் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை

போலி அனிமேஷன் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தடை


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை கே.கே.நகரில் மோசடியில் ஈடுபட்ட ஓ.சி.இ., காலேஜ் ஆப் அனிமேஷனில், மாணவர் சேர்க்கைக்கு தடைவிதித்து மதுரை கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இக்கல்லூரி இக்னோ பல்கலை, மனோன்மணியம் மற்றும் அண்ணாமலை பல்கலைகளுடன் இணைந்து அனிமேஷன், மல்டிமீடியா, விஸ்காம் போன்ற துறைகளில் பட்டயம், பட்டப்படிப்புகளை வழங்குவதாக கூறி மாணவர்களை சேர்த்தது. இதற்காக ஓராண்டுக்கு ரூ. 77 ஆயிரம் வரை வசூலித்தது. மேலும் கிளைகளை துவக்கி , கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்தது.


ஆனால் அவர்கள் கூறியபடி மாணவர்களுக்கும், கிளைகளை அமைத்த பயிற்சி மைய நிர்வாகிகளுக்கும் எதையும் வழங்கவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதாக கருதிய பல மாணவர்களும், பயிற்சி மைய நிர்வாகிகளும் நேற்று முன்தினம் இக்கல்லூரியை முற்றுகையிட்டனர். மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் உதவி கமிஷனர் வெள்ளத்துரையிடம் மனு கொடுத்தனர்.


இதையடுத்து இக்கல்லூரி குறித்து விசாரணை நடத்த நேர்முக உதவியாளர் ஜெயசிங் ஞானதுரைக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். விசாரணையில் இக்கல்லூரி நேரடியாக இக்னோ பல்கலையில் இணைவிப்பு பெறவில்லை, 8ம் வகுப்பு படித்த மாணவரிடமும் பணம் பெற்றுக் கொண்டு சில பட்டய வகுப்புகளில் சேர்த்துள்ளனர். மாணவருக்கு வழங்கிய அடையாள அட்டையில் சென்னை முகவரியும், ஆனால் அவர் படிப்பது அதே பெயரிலான மதுரையில் உள்ள கல்லூரியிலும் உள்ளது.


கிரீன் வேலி கம்யூனிட்டி காலேஜ் அன்ட் ஓ.சி.இ., என்ற நிறுவனம் சார்பில் மாணவர்களிடம் பணம் வசூலித்தனர்.


ஆனால் அதற்கான ரசீதில் ஓ.சி.இ., என்று மட்டுமே உள்ளது. இதுபோல பல தகவல்கள் வெளியாயின. இதையடுத்து அக்கல்லூரிக்கு கலெக்டர் சகாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்த கலெக்டர், "இந்த கல்வி ஆண்டில் இனிமேல் மாணவர்கள் சேர்க்கையை நடத்த தடைவிதிக்கப்படுகிறது. மேலும் விசாரணை முடியும் வரை விண்ணப்பங்களை பெறும் வகையில் டிவி உட்பட எதிலும் விளம்பரப்படுத்தக் கூடாது" என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us