தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை

பள்ளியில் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை

பள்ளியில் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 12:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளியில் ஒருமாத காலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து கல்வித் துறை உயரதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.


தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து, கோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கி இருப்பதால், புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இன்னும் ஒரு மாதம் வரை இதே நிலை நீடிக்கும் என்பதால், அதுவரை பள்ளிகளில் ஆசிரியர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நேற்று மாநில கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


கல்வித்துறை செயலாளர் சபீதா, துவக்கக் கல்வி இயக்குனர் மணி, அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கினர். மதுரையில் முதன்மை கல்வி அலுவலர்கள் ரஜனிரத்னமாலா, ஸ்ரீதேவி, கல்வி அலுவலர்கள் சுவாமிநாதன், ரோஸ்லின்மேரி பங்கேற்றனர்.
பள்ளியில் மொழிப்பாடம், கணிதம், அறிவியல் பாட வேளைகள் குறித்து கால அட்டவணை ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்நேரங்களில் மாணவர்களுக்கு செயல்பயிற்சி நிறைய வழங்க வேண்டும். மாதிரி பார்லிமென்ட் நடத்தலாம்.


உள்ளாட்சி மன்றங்கள், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு களப்பயிற்சிக்கு அழைத்து செல்லலாம். பொது அறிவு தொடர்பாகவும், சுற்றுச் சூழல் குறித்தும் பாடம் நடத்த வேண்டும்.


தன்னார்வத்துடன் வந்து கற்பிக்க விரும்புவோரையும் பயன்படுத்தலாம். மாணவர்களை சும்மா வைத்திருக்காமல், பாடம் அல்லது செயல் அனுபவங்களில் ஈடுபடும்படிச் செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us