UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM
ADDED : ஜூன் 17, 2011 05:39 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.
கடந்த
சில தினங்களுக்கு முன்னர் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கான கட்டண விபரம் வெளியிடப்பட்டது. இருப்பினும் பெரும்பாலான பள்ளிகள் கட்டண விபரத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகளுக்கான கல்வி கட்டண விபரம் அரசின் இணையதளத்தில் http://www.pallikalvi.in/ வெளியிடப்பட்டது.இதுகுறித்து
பள்ளி கல்வித்துறை அமைச்சசர் சி.வி. சண்முகம் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் தொடர்பாக பெற்றோர்களிடம் இருந்து புகார் வந்தால் அது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் அதிகமாக கட்டணங்கள் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.